/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவர் வெட்டிக் கொலை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :22 மார்ச் 2017, 9:15 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம்-நரையன்குளத்தைச் சேர்ந்தவர் மாயன் மகன் ஈஸ்வரன் (45). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இசக்கியம்மாள், கற்பகவள்ளி என்ற இரு மகள்கள் உண்டு.

ஈஸ்வரன், குட்டதட்டியில் உள்ள தேவதாஸ் என்பவர் காட்டில் தங்கியிருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை செய்து வந்தார். அருகில் உள்ள காட்டில் இவரது மனைவி வேலை செய்கிறார்.

இந்நிலையில் ஈஸ்வரனை அவரது மனைவி கடந்த இரு நாட்களாக செல்போனில் தொடர்பு கொண்டாராம். ஆனால் போன் எடுக்கவில்லையாம். இதற்கிடையே புதன்கிழமை ஈஸ்வரன் வேலை செய்த இடத்திற்கு அருகில் உள்ள மம்சாபுரம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் நடராஜ் என்பவர் காட்டின் அருகே வெட்டுக் காயங்களுடன் அழுகிய நிலையில் இவரது சடலம் கிடந்துள்ளது. 

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் செய்தார். நகர் காவல் ஆய்வாளர் ஜெ.மகேஸ்குமார், வழக்குப் பதிவு செய்து, சடலத்தைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கொலைக் காரணம்? கொலையை யார் செய்தது என்பது குறித்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.