/

கள்ளழகர் சூடிக் கொள்ள ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மங்களப் பொருட்கள் அனுப்பும் விழா

மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு, ஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த மங்கள பொருட்கள் அனுப்பும் விழா திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் நடைபெற்றது.

News image
Updated On :8 மே 2017, 12:23 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு, ஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த மங்கள பொருட்கள் அனுப்பும் விழா திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் நடைபெற்றது.

ஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த வஸ்திரம், மாலை, கிளி உள்ளிட்டவற்றை செவ்வாய்கிழமை (9-ம் தேதி) இரவு தல்லாகுளம் பெருமாள் திருக்கோயிலில் கள்ளழகர் திருமஞ்சனம் கண்டருளி சூடிக் கொள்வார். அதன் பின்னரே வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதற்காக ஸ்ரீஆண்டாளுக்கு விசேஷ மாலை, புது வஸ்திரம், கிளி உள்ளிட்டவை சூடப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இவை மாட வீதிகளின் வழியே உலா வரப்பெற்று மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் பட்டர் அ.சுதர்ஸன், வேதபிரான்பட்டர், ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன், கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ச.ராமராசா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.