அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சுருளி அருவியில் 5 -ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம் சுருளி அருவியில், தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால், 5 -ஆவது நாளாக வியாழக்கிழமை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

News image
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் உள்ளே நுழையாமல் இருக்க வியாழக்கிழமை அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பிகள்.
Updated On :9 நவம்பர் 2017, 7:25 pm

DIN

தேனி மாவட்டம் சுருளி அருவியில், தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால், 5 -ஆவது நாளாக வியாழக்கிழமை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
வடகிழக்கு பருவமழை எதிரொலியாக சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான ஹைவேவிஸ் மலை அணைப் பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்ததையடுத்து, அங்கிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. 
இதனால், சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (நவ. 5) அங்கு குளிக்க மேகமலை வன உயிரின சரணாலய அதிகாரிகள் தடை விதித்தனர். 
இந்நிலையில், சுருளி அருவிக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நீராட முடியாமல் அருகில் செல்லும் சுருளியாற்றில் குளித்துச் சென்றனர். 
இதனிடையே வியாழக்கிழமை வரை அருவியில் வெள்ளப் பெருக்கு குறையாமல் இருந்ததால் அங்கு யாரும் சென்றுவிடாமல் இருப்பதற்காக தடுப்புக் கம்பிகள் வைத்து தடை ஏற்படுத்தி உள்ளனர். 
இதுகுறித்து சரணாலய ஊழியர் ஒருவர் கூறும் போது, 'அருவியில் நீர்வரத்து குறைந்தால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.