நளினிக்கு பரோல் வழங்க முடியாது: தமிழக அரசு பதில் மனு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு பரோல் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு பரோல் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தனது மகளின் திருமண ஏற்பாடுகளைச் செய்ய 6 மாதம் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், தமிழக உள்துறை துணைச் செயலாளர் டேவிட் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், லண்டனில் உள்ளதாகச் சொல்லப்படும் நளினியின் மகள் கடவுச் சீட்டை ஆதாரமாகச் சமர்ப்பிக்கவில்லை. நளினி செய்துள்ள குற்றம் அனைத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
ஒருவேளை அவருக்கு பரோல் வழங்கினால் தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளதாக, அரசும் சிறைத் துறையும் கருதுகின்றன. எனவே, நளினியை பரோலில் செல்ல அனுமதிக்க முடியாது என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு வெள்ளிக்கிழமை (நவ.17) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...