தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நீதிபதி கிருபாகரனை பேஸ்புக்கில் விமர்சித்த பெண் கைது! 

ஜாக்டோ-ஜியோ போராட்டம் பற்றிய விசாரணையில் நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக பேஸ்புக்கில் விமர்சித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :21 நவம்பர் 2017, 10:31 am

DIN

சென்னை: ஜாக்டோ-ஜியோ போராட்டம் பற்றிய விசாரணையில் நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக பேஸ்புக்கில் விமர்சித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் நீதிபதி கிருபாகரன். தனது தீர்ப்புகள் மூலமும், வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கும் கருத்துக்களுக்காகவும் புகழ்பெற்றவர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கமான ஜாக்டோ-ஜியோ அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான வழக்கானது நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சில கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.அது அப்பொழுதே பெரும் விமர்சனதுக்குள்ளானது.

அதே நேரம் வேறு ஓர் வழக்கு விசாரணையில் சமூக வலைத்தளங்களில் நீதிமன்ற தீர்ப்பு பற்றியும், நீதிபதிகள் பற்றியும் விமர்சிக்கப்படுவது தொடர்பாகவும் அவர் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக பேஸ்புக்கில் விமர்சித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியினைச் சேர்ந்தவர் மஹாலக்ஷ்மி. இவர் ஜாக்டோ-ஜியோ போராட்டம் பற்றிய விசாரணையில் நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் சில விமர்சனங்களைத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நீதிமன்ற மாண்பினை அவமதிப்பு என்ற காரணத்தின் காரணமாக அவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.