மெர்சல் படத்தில் விஜய் உள்நோக்கத்தோடு மத்திய அரசை விமர்சித்துள்ளார்: தமிழிசை சௌந்தரராஜன்

மெர்சல் படத்தில் நடிகர் விஜய் உள்நோக்கத்தோடு மத்திய அரசை விமர்சித்துள்ளார் என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மெர்சல் படத்தில் விஜய் உள்நோக்கத்தோடு மத்திய அரசை விமர்சித்துள்ளார்: தமிழிசை சௌந்தரராஜன்
Updated on
1 min read

மெர்சல் படத்தில் நடிகர் விஜய் உள்நோக்கத்தோடு மத்திய அரசை விமர்சித்துள்ளார் என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் மெர்சல். இந்தப் படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மெர்சல் படத்தில் நடிகர் விஜய் மத்திய அரசை உள்நோக்கத்தோடு விமர்சித்துள்ளார். மக்கள் கை தட்டும் கருத்துகள் எல்லாம் நல்ல கருத்துகள் என எடுத்துக்கொள்ள முடியாது.

சிங்கப்பூரில் மருத்துவம் இலவசமாக வழங்கவில்லை என எனக்கு தொலைப்பேசி மூலம் தகவல் வந்தது. வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு மத்திய அரசு விமர்சிக்கப்படுகிறது. பணமதிப்பிழப்பால் திருடுவதும், குடிப்பதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்புக்கு மட்டுமல்ல கமல் மன்னிப்பு கேட்க வேண்டிய விஷயம் எவ்வளவோ இருக்கிறது.

ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது. தமிழகத்தில் பழைய அரசு கட்டடங்களை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com