மே தினம்: ஆளுநர் புரோஹித் வாழ்த்து
மே தினத்தை ஒட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


மே தினத்தை ஒட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: தேசத்தின் பொருளாதாரத்துக்கு அடித்தளமாக இருக்கக் கூடிய தொழிலாளர் தோழர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் கௌரவப்படுத்தவும் மே தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் தொழிலாளர் வர்க்கத்தின் கடின உழைப்பையும் முயற்சிகளையும் மதித்து வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
தொழிலாளர்கள் தேசம் மற்றும் அவர்களது குடும்பத்தின் பொருளாதார நலனுக்காக இரவு, பகலாக பாடுபட்டு உழைக்கிறார்கள். இந்த குறிப்பிடத்தக்க மே தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...