நடிகர் கமல்ஹாசன் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள விஸ்வரூபம் -2 படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், மர்மயோகி' என்ற படத்தைத் தயாரிப்பது தொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ரூ.100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டு, தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடியும், படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்க கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடியும் வழங்கப்பட்டது. ஆனால் அவர் மர்மயோகி' படத்தை தயாரிக்காமல் உன்னைப் போல்' ஒருவன் படத்தை எடுத்தார்.
இதனையடுத்து மர்ம யோகி' படத்தின் தயாரிப்புப் பணிகளுக்காக கொடுத்த ரூ.6.90 கோடியை திரும்ப தரக் கோரி கடந்த 2016 -ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் -2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 -ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
மர்மயோகி' படத்துக்காக அவருக்கு கொடுத்த ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியாக வழங்க கமல்ஹாசனுக்கு உத்தரவிடவும், அதுவரை விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும்' என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









