நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பேராசிரியை நிர்மலா தேவியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு

பேராசிரியை நிர்மலா தேவியின் நீதிமன்ற காவலை மேலும் நீட்டித்து சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:54 pm IST

பேராசிரியை நிர்மலா தேவியின் நீதிமன்ற காவலை மேலும் நீட்டித்து சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியது தொடர்பான வழக்கில் தம்மை ஜாமீனில் விடக் கோரி, நிர்மலா தேவி ஏழு முறை மனு தாக்கல் செய்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அவற்றை தள்ளுபடி செய்தது. இவர் மீது சிபிசிஐடி போலீஸார், குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட முதல்கட்ட குற்றப்பத்திரிக்கையை கடந்த சில நாள்களுக்கு முன் தாக்கல் செய்தனர். 

இந்நிலையில் நிர்மலா தேவியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் அவரை சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் இன்று மீண்டும் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி அவரை ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இதேபோல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாக மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் நீதிமன்ற காவலும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.