தெற்கு ரயில்வேயின் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் சத்தியம்' என்ற விழிப்புணர்வு இயக்கம், சென்னையில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே. குல்சிரேஷ்டா தலைமை தாங்கி சத்தியம்' இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில், பொது வாழ்க்கையில் நேர்மை, நாணயம், ஒழுக்கம், நீதியை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பொதுநல சேவையில் ஈடுபடும் அரசுப் பணியாளர்கள் இத்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.