
தமிழக காவல் துறையில் 50 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல் துறையின் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, மாநிலம் முழுவதும் 50 காவல் ஆய்வாளர்களைப் பணியிட மாற்றம் செய்து டிஜிபி தே.க.ராஜேந்திரன் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இதில் முக்கியமாக, சென்னை மாம்பலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பி.எஸ்.சேகர், அமைந்தகரை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.ராஜன், கொருக்குப்பேட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் என்.ரவிக்குமார், சென்னை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் ஆர்.துளசிமணி ஆகியோர் உளவுப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு மொத்தம் 50 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




