மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

கருணைக் கொலை செய்யக் கோரிய மனு: மருத்துவ ஆய்வுக்கு உத்தரவு

வலிப்பு மற்றும் மூளை பாதிப்படைந்த சிறுவனை கருணைக் கொலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுவனின் நோய் குறித்து ஆய்வு செய்ய

Updated On :21 ஆகஸ்ட் 2018, 4:26 am IST


வலிப்பு மற்றும் மூளை பாதிப்படைந்த சிறுவனை கருணைக் கொலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுவனின் நோய் குறித்து ஆய்வு செய்ய மருத்துவக் குழுவை அமைக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடலூரைச் சேர்ந்த திருமேனி தாக்கல் செய்த மனுவில், தையல் தொழிலாளியான எனக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டில் பிறந்த எனது மகனால் பேச முடியாது. பத்து வயதான எனது மகனுக்கு பல்வேறு குழந்தைகள் நல மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை அளித்தும், எந்தப் பயனும் இல்லை. அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் என் மகனைக் குணப்படுத்த முடியாது எனத் தெரிவித்துவிட்டனர். இதனால் குடும்பத்தினர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே எனது மகனை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி என்.கிருôபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் மகனின் நோய் குறித்து ஆய்வு செய்ய மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.