ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

618 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்கள்: புதிதாக விண்ணப்பிக்கலாம்

இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்குப் பின்னர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 618 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் காலியாக உள்ளதால், புதிதாக இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST


சென்னை: இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்குப் பின்னர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 618 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் காலியாக உள்ளதால், புதிதாக இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள்,  தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்று அனைத்து இடங்களும் நிரம்பின.
இந்நிலையில் பி.டிஎஸ்.  அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 29-ஆம் நிறைவு பெற்றது. கலந்தாய்வின் முடிவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 618 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் இந்த இடங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:  மருத்துவப் படிப்புக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு முன்பு வரை  விண்ணப்பிக்காதவர்கள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்காக இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
"The secretary, Selection committee, Kilpauk, Chennai-10'  என்ற பெயரில் மாற்றத்தக்க ரூ.500-க்கான வரைவோலை எடுத்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடனும், தேவையான சான்றுகளுடனும் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை "தேர்வுக் குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை-10' என்ற முகவரிக்கு தபாலிலோ நேரிலோ சமர்ப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு செப்டம்பர் 6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
   இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நீட் தேர்வில் 119-க்கு குறைவாகவும், பிற பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 96 மதிப்பெண்ணுக்கு குறைவாகவும் எடுத்திருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இன்று கலந்தாய்வு: பல் மருத்துவப் படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.31) நடைபெற உள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இரண்டு நாள்கள் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடைமுறைகளை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.