தில்லிக்கு சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தில்லிக்கு சென்றார். அவர் பிரதமர் மோடியை 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் ஆளுநர் சந்தித்தார். இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது அவர் அரசியல் நிலவரம் குறித்து விளக்கியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் அண்மையில் கடுமையாக சேதமடைந்தன. இதை நேரில் சென்று பார்வையிட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சீரமைப்புப் பணிகளுக்கு முடிந்த உதவிகளை செய்வதாக உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், அவர் பிரதமரை சந்தித்திருப்பதால் அது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.
அதேசமயம், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாகவும் அவர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தியிருக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


