இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு

ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவு அதன் இணையதளத்தில் கடந்த 15-ஆம் தேதி (சனிக்கிழமை) பதிவேற்றம் செய்யப்பட்டது. 

அதில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு கடந்த மே 28 - ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், 3 வாரங்களுக்குள் ஆலை செயல்படுவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா தரப்பில் அவரது வழக்கறிஞரும் மக்கள் கண்காணிப்பக நிர்வாகியுமான ஹென்றி முறையீடு செய்துள்ளார்.

அப்போது இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.