பட்டப்பகலில் மர்ம நபரால் வெட்டிக் கொல்லப்பட்ட கிளி ஜோதிடர்: பெண் வசியம் காரணமா?
திருப்பூரில் பட்டப்பகலில் போக்குவரத்து அதிகமுள்ள சாலையில் கிளி ஜோதிடர் ஒருவர் மர்ம நபரால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் பட்டப்பகலில் போக்குவரத்து அதிகமுள்ள சாலையில் கிளி ஜோதிடர் ஒருவர் மர்ம நபரால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் குமரன் ரோட்டின் அருகில் பின்னி காம்பவுண்ட் ரோட்டில் உள்ள பூங்காவில் ரமேஷ் என்பவர் கிளி ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் திங்கள் காலை அவர் அந்த சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, ஹெல்மெட் அணிந்த மர்மநபர் ஒருவர் நீண்ட அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றிருக்கிறார்.
இந்த கொடூர கொலைக்காட்சியானது அருகில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த கொலைகாரன் ரமேஷை சரமாரியாக வெட்டிய காட்சிகள் காமிராவில் பதிவாகியுள்ளது. .
கொலை செய்த பின்னர் மர்ம நபர் அங்கு வீசி விட்டுச் சென்ற துண்டு பிரசுரங்களில், பூங்காவுக்கு வரும் பெண்களை ரமேஷ் வசியம் செய்து தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் பாலியல் ரீதியாக அவர்களைத் துன்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
தகவலறிந்து விரைந்து வந்த போலீசாரால் ரமேஷின் உடல் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...