காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல்?: திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய முடிவு

திரையரங்குகளில் டிஜிட்டல் முறை ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்ச் 1-ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியீட்டை நிறுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 8:57 pm

DIN

திரையரங்குகளில் டிஜிட்டல் முறை ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்ச் 1-ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியீட்டை நிறுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது. இதனால், புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
கியூப், யு.எஃப்.ஓ. ஆகிய நிறுவனங்கள் தமிழகத் திரையரங்குகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படங்களைத் திரையிட்டு வருகின்றன. இந்த இரு நிறுவனங்களுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வெவ்வேறு விதங்களில் பணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது. 
ஒரு படத்தை திரையிட்டு அதை திரையரங்கிலிருந்து எடுக்கும் வரைக்கும் அதிக நாட்களுக்கு ரூ.34,000 கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வாரத்துக்குத் திரையிட ரூ.12,000 செலுத்த வேண்டும். 
இதனால், தயாரிப்பாளர்கள் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். அதே சமயத்தில், பிற நிறுவனங்கள் குறுகிய காலத்துக்குத் திரையிட ரூ.4,000 , நீண்ட காலத்துக்கு ரூ.12,000 கட்டணமாகப் பெறத் தயாராக உள்ளன. ஆனால், கியூப், யுஎஃப்ஓ ஆகிய இரு நிறுவனங்கள்அதிக தொகையைக் கேட்கின்றன.
வேலை நிறுத்தம்: இந்நிலையில், திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடுவதற்கான ஒளிபரப்புக் கட்டணத்தை அதிகமாகப் பெற்று வருவதைக் கண்டித்தும் சிறியமுதலீட்டுப் படங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிரமத்துக்குத் தீர்வு காணும் விதமாகவும் வேலை நிறுத்தத்தைத் தொடங்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியதாவது: இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 1-ஆம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். 
எங்களது முடிவை தெலுங்கு உள்ளிட்ட சில மாநில திரைப்படத் துறையினர் ஆதரித்துள்ளனர். இந்தப் போராட்டம் தொடர்பாக மலையாளம், கன்னட திரையுலகினரின் முடிவு என்ன என்பது புதன்கிழமை (பிப். 7) தெரியவரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.