

அரசு இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் அரசு இ-சேவை மையங்களில் அசல் நிரந்தர ஆதார் அட்டைக்கு மாற்றாக பிளாஸ்டிக் ஆதார் அட்டை ரூ.30 கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிளாஸ்டிக் ஆதார் அட்டை அச்சிட்டு வழங்குவதை பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் தடை செய்துள்ளது. எனவே, அரசு இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை நிறுத்தப்படுகிறது. மேலும், இம்மையங்கள் பொதுமக்களின் ஆதார் அட்டையின் நகலை முழு தாளில் ரூ.12-க்கு அச்சிட்டு வழங்கி வருகிறது. இச்சேவை தொடரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.