நீதிமன்ற உத்தரவுப்படி 6 பேரின் உடல்கள் இன்று பிரேதப் பரிசோதனை

நீதிமன்ற உத்தரவுப்படி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள 6 பேரின் உடல்கள் புதன்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.
Updated on
1 min read

நீதிமன்ற உத்தரவுப்படி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள 6 பேரின் உடல்கள் புதன்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
தூத்துக்குடியில் கடந்த 22-ஆம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்கள் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி அதே விதிமுறைகளை கடைப்பிடித்து, இதுவரை பிரேதப் பரிசோதனை செய்யப்படாத 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள 6 பேரின் உடல்களையும் அகில இந்திய மருத்துவக் குழுவினர் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் புதன்கிழமை (ஜூன் 6) இரவுக்குள் பிரேதப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com