ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

2 மாவட்டங்களில் பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி

நாகப்பட்டினம், திருவாரூரில் நிகழ்ந்த சம்பவங்களில் பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Updated On :30 ஜனவரி 2024, 6:45 pm IST

நாகப்பட்டினம், திருவாரூரில் நிகழ்ந்த சம்பவங்களில் பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், அவர் படித்தளித்த அறிக்கை: நாகப்பட்டினம் கீழ்வேளூர் பெருமாள் வடக்கு வீதியில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு கேபிள் இணைப்புக் கொடுக்க முற்பட்ட போது மின்சாரம் பாய்ந்து கணேசன் மற்றும் அவரது சகோதரர் ராஜூ ஆகியோர் இறந்தனர். இருவரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.
மண் சரிந்து விபத்து: திருவண்ணாமலை மாவட்டம் பொலக்குணம் கிராமத்தில் பாறைகளை வெடிக்கச் செய்து கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த குமார், தங்கராஜ், சீதாராமன் ஆகியோர் மண் சரிந்து உயிரிழந்தனர்.
அவர்களது குடும்பங்களுக்குக் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்தில் நிலத்தின் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது என்றார் முதல்வர் பழனிசாமி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.