ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

சிடிஎஸ் நிறுவன வழக்கு: விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்

சிடிஎஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி டி.எஸ்.சிவஞானம், தலைமை நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

Updated On :27 ஜூன் 2018, 3:05 am IST

சிடிஎஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி டி.எஸ்.சிவஞானம், தலைமை நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-17 -ஆம் நிதியாண்டில் வருமானத்தைக் குறைத்துக் காட்டி ரூ. 2,912 கோடி வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சிடிஎஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு எதிராக வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இதனை எதிர்த்து சிடிஎஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் விசாரித்து வந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையிலிருந்து தான் விலகிக் கொள்வதாக நீதிபதி டி.எஸ்.சிவஞானம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.