பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

புழல் சிறையில் இருந்து 11 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை

சென்னை அருகே உள்ள புழல் மத்திய சிறையில் இருந்து 11 ஆயுள் தண்டனைக் கைதிகள் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

Updated On :27 ஜூன் 2018, 2:38 am IST

சென்னை அருகே உள்ள புழல் மத்திய சிறையில் இருந்து 11 ஆயுள் தண்டனைக் கைதிகள் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி, ஆயுள் தண்டனை பெற்று தமிழக சிறைகளில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், பல்வேறு சமூக அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆயுள் தண்டனைப் பெற்று பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்தார். 
அதன்படி, புழல் சிறையில் இருந்து ஆயுள் தண்டனைக் கைதிகள் 67 பேர் கடந்த 6-ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர். இரண்டாம் கட்டமாக கடந்த 13-ஆம் தேதி 8 பெண் கைதிகள் உள்பட 52 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 
மூன்றாம் கட்டமாக கடந்த 20-ஆம் தேதி 4 பெண்கள் உள்பட 47 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் நான்காம் கட்டமாக, புழல் தண்டனைச் சிறையில் இருந்து 11 ஆண் கைதிகள் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். இவர்களை சிறை வாசலில் நின்ற அவர்களது உறவினர்கள், கண்ணீர் மல்க கட்டியணைத்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி, விடுதலையானவர்களுக்கு அவர்கள் சுயதொழில் செய்து வாழ்வதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த முறை விடுதலையான கைதிகளுக்கு, அந்த உபகரணங்கள் வழங்காதது கைதிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.