மதவாதத்துக்கு துணை போனது யார் என்று சட்டப் பேரவையில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
சட்டப் பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசிய போது நடந்த விவாதம்:-
மு.க.ஸ்டாலின்: இது திராவிட மண். இந்த மண்ணில் மதவெறி சக்திகளுக்கு நிச்சயமாக இடமில்லை. அது தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி. அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி.
பெரியார், அண்ணா பிறந்த மண்ணில், நாம் மதச்சார்பற்ற சக்திகளை மட்டுமே ஊக்கப்படுத்தி இருக்கிறோம். கருணாநிதி, எம்.ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தில் மதவெறி சக்திகளுக்கு துணைபோனது கிடையாது.
அந்த சமூக நல்லிணக்கத்தையும், மத நல்லிணக்கத்தையும் போற்றி வளர்த்த மண் இந்த தமிழ்நாட்டு மண். ஆனால், அண்மைக் காலங்களில் மதவெறி சக்திகளுக்கு இடம் அளிக்கக் கூடிய வகையில் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நான் வேதனையோடு சொல்லிக் கொள்கிறேன்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மெல்ல மெல்ல பேசிக் கொண்டே மிகப் பெரிய விஷ விதையை சட்டப் பேரவையில் விதைத்துக் கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். எப்போது நாங்கள் மதவெறி சக்திகளுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறோம்? சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆட்சிதான் இந்த ஆட்சி.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு கருத்துச் சொல்ல உரிமை உண்டு. மறுக்க ஆளும் தரப்பான உங்களுக்கு உரிமை உண்டு. சொல்லவே கூடாது என்று சொல்லும் அதிகாரம் உங்களுக்கு இல்லை.
ஓ.பன்னீர்செல்வம்: நான் என்ன சொன்னேன்? மதவெறி சக்திகளுக்கு ஆதரவு என்ற போர்வைகளை எல்லாம் எங்கள் மீது போர்த்த வேண்டாம். மத்திய அரசில் நாங்கள் அங்கம் வகித்தோம். ஒரே ஆண்டில் கொள்கைக்காக முடிவெடுத்து ஆதரவை வாபஸ் பெற்றோம். ஆனால், நீங்கள்தான் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் அங்கம் வகித்தீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
துரைமுருகன்: நல்லா முடிவு எடுத்தீங்க. கரசேவைக்குப் போய் கல்லு எடுத்து கொடுத்தீங்க.
முதல்வர் பழனிசாமி: ஆட்சி, அதிகாரம் வேண்டும் என்றால் யாரிடம் வேண்டுமாலும் போய் சேர்ந்து கொள்கிறீர்கள். அப்போது மதவாதம் தெரியவில்லை. 5 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்தீர்கள். மனசாட்சிப்படி சொல்லுங்கள் பார்க்கலாம். அன்றைக்கு மதவாதம் தெரியவில்லை. இன்றைக்கு மதவாதம் தெரிகிறதா? எங்களைப் பொருத்தவரை ஒரே நிலையில் இருக்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கங்கனாவின் பேச்சை பாஜகவே பொருட்படுத்தாது! நாங்கள் ஏன்? சிஜேபி

கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிய வாடிக்கையாளர்!

ஹுமா குரேஷியின் மகாராணி சீசன் 5 படப்பிடிப்பு தொடக்கம்!

வன்கொடுமையாளர்களைப் பாதுகாக்கக் கூறினாரா பிரகலாத் ஜோஷி? ராகுல் காந்தி விமர்சனம்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


