இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காவிரி: மத்திய அமைச்சருக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க முடியாது என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 மார்ச் 2018, 8:18 pm

DIN

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க முடியாது என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் 'உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி, ஆறு வார காலத்துக்குள் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைக்க இயலாது' என திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சால், மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். 
உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருந்தால், தமிழகத்துக்கான தண்ணீர் பிரச்னை ஓரளவு இருந்திருக்காது. தற்போதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தாமதம் செய்தால், சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று வாசன் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.