சென்னை: காவிரி விவகாரத்தில் ஓட்டு வேட்டைக்காக விளையாடாதீர்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை இல்லை. வலுவான உறுதி இருந்தால், மத்திய அரசு நினைத்தால் செய்யலாம்.
முதல்வரை சந்திக்க இன்று நேரம் கேட்டுள்ளேன். நேரம் வழங்கப்பட்டால், முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்துமாறு கூறுவேன். காவிரி விவகாரத்துக்காக எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால் நன்றாக இருக்கும். தேவைப்பட்டால் தில்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்துக்காக அழுத்தம் கொடுப்பேன் என்று கூறினார்.
மேலும், 2 மாநிலங்களுக்கும் தண்ணீர் தேவை. அதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் ஓட்டு வேட்டைக்காக விளையாட வேண்டாம் என்று கமல் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல், ஏப்ரல் 1ம் தேதி வரும் ஞாயிற்றுக் கிழமை தூத்துக்குடியில் மக்களின் போராட்டத்தில் பங்கேற்கிறேன் என்றார்.
செய்தியாளர்களின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த கமல், நாங்கள் சொல்வதை எல்லாம் அரசு கேட்கிறதா என்ன? என்று கேட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாவேந்தரை மக்கள்மயப்படுத்துவது அவசியம்: கவிஞா் வைரமுத்து

கும்பகோணம் ‘சாஸ்தரா’வில் 25-ஆவது ஆண்டு விழா
டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் தீா்த்தவாரி
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


