இந்து முன்னணிப் பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக, கோவையில் 5 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த சசிகுமார் (37) கொலை வழக்குத் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள், கோவை -ரேஸ்கோர்ஸில் கிளை அலுவலகம் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சையது அபுதாஹீர் உள்ளிட்ட நான்கு பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த மார்ச் 18 -ஆம் தேதி சோதனை நடத்தி இருசக்கர வாகனங்கள், செல்லிடப்பேசி, சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து, சசிகுமாரின் சகோதரர்கள் சுதாகர், தனபால் ஆகிய இருவரையும் கடந்த சில நாள்களுக்கு முன்னர் ரேஸ்கோர்ஸில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., மாநகரக் காவல் துறை அதிகாரிகளிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
சோதனை: இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, உக்கடம், குழந்தை கவுண்டர் வீதியைச் சேர்ந்த அனீஷ் (32), செல்வபுரம், ராஜரத்தினம் நகரைச் சேர்ந்த பெப்பி ரஹ்மான் (25), குனியமுத்தூர் அருகிலுள்ள சுகுணாபுரத்தைச் சேர்ந்த ஹைதர் (33), துடியலூர், சேரன் காலனியைச் சேர்ந்த சதாம் உசேன், வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த முகமது அலி ஆகியோரது வீடுகளில் புதன்கிழமை காலை என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய இந்தச் சோதனை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. மேலும் அனீஷுக்கு சொந்தமாக கண்ணப்ப நகரில் உள்ள வெல்டிங் பட்டறைக்கு அவரை அழைத்துச் சென்ற அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் செல்லிடப்பேசி, டைரி, சிம்கார்டு, மடிக்கணினி, மெமரி கார்டு, குறுந்தகடு உள்ளிட்டவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. சோதனையின்போது கோவை மாநகரக் காவல் துறையினரும் உடனிருந்தனர்.
மிரட்டல் புகார்
என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை என்ற பெயரில், வீட்டில் இருந்த பொருள்களைக் கலைத்தும், தூக்கி வீசியும் அத்துமீறி நடந்துகொண்டதாக விசாரிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
சில காகிதங்களில் கையெழுத்திடுமாறும் அவர்கள் மிரட்டல் விடுத்ததாகவும், தாங்கள் சொல்வதுபோல் கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என அச்சுறுத்தி வருவதாகவும், அனீஷ், பெபின் ரஹ்மான், ஹைதர் அலி ஆகியோர், குடும்பத்தினருடன் மாநகரக் காவல் துறை ஆணையர் பெரியய்யாவிடம் புகார் அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விருச்சிகம் - இன்றைய ராசி பலன் (14.08.2026)
ரிஷபம் - இன்றைய ராசி பலன் (14.08.2026)
கன்னி - இன்றைய ராசி பலன் (14.08.2026)
மீனம் - இன்றைய ராசி பலன் (14.08.2026)
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



