காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை மூன்று நாட்களுக்கு இலவசம் 

சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு இலவசம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :25 மே 2018, 12:59 pm

DIN

சென்னை: சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு இலவசம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னைவாசிகளின் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவையின் புதிய வழித்தடங்கள் வெள்ளியன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற விழாவில், பச்சை வழித்தடத்தில் நேரு பூங்கா - சென்னை சென்ட்ரல் மெட்ரோ மற்றும் நீல வழித்தடத்தில் சின்னமலை - ஏஜி - டிஎம்எஸ் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளில் பயணிகள் சேவைகள் துவக்கி வைக்கப்பட்டது.

பச்சை வழித்தடத்தில் எழும்பூர் மெட்ரோ மற்றும் சென்னை சென்டிரல் மெட்ரோ, நீல வழித்தடத்தில் சைதாப்பேட்டை மெட்ரோ, நந்தனம், தேனாம்பேட்டை மற்றும் ஏஜி - டிஎம்எஸ் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு இலவசம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் சேவையின் புதிய வழித்தடங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு இந்த சலுகை வழங்கப்படுவதாக நிர்வாக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.