ஆவடியில் முதியோர் படுகொலை: காவலாளி மாயம்

சென்னையை அடுத்துள்ள ஆவடியில் முதியோர் செவ்வாய்கிழமை படுகொலை செய்யப்பட்டனர். மேலும் அவ்வீட்டின் காவலாளியும் காணவில்லை.
ஆவடியில் முதியோர் படுகொலை: காவலாளி மாயம்
Updated on
1 min read

சென்னையை அடுத்துள்ள ஆவடியில் முதியோர் செவ்வாய்கிழமை படுகொலை செய்யப்பட்டனர். மேலும் அவ்வீட்டின் காவலாளியும் காணவில்லை.

ஜெகதீசன் (68), விஷாலினி (61) தம்பதியினர் அரசு ஊழியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் இருவரும் சென்னையை அடுத்துள்ள புறநகர் பகுதியான ஆவடியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்கிழமை காலை 8 மணியளவில் அந்த வீட்டில் பணி செய்து வந்த கார்பென்டர் சந்திரசேகர் என்பவர் வழக்கம்போல் அங்கு சென்ற போது வீடு உள்புறம் பூட்டியிருந்துள்ளது.

இதையடுத்து அவர் வீட்டின் கதவை தட்டியுள்ளார். பின்னர் சந்தேகமடைந்த சந்திரசேகர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ரத்தக் கறையை கண்டுள்ளார். எனவே அவர் ஜெகதீசன் சகோதரர் கோபிநாத்துக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் அங்கு வந்த கோபிநாத் பெட்ரூமில் முதியவர்கள் இருவரும் படுகொலை செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கு இரும்புக் கம்பியையும் கண்டுள்ளார். உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் 15 நாட்களுக்கு முன்பு காவலாளியாகப் பணியில் சேர்ந்தவர் மாயமானது தெரியவந்தது. மேலும் வீட்டிலிருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இவ்வழக்கு தொடர்பாக 5 சிறப்புப் படை நியமிக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com