மக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடு
/

தலைமை ஆசிரியை கண்டித்ததால் பிளஸ் 2 மாணவிகள் மூவர் தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அருகே சிறப்பு வகுப்புக்கு வராததை தலைமை ஆசிரியை கண்டித்ததால், விஷ விதையை சாப்பிட்டு பிளஸ் 2 மாணவிகள் மூவர் புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அருகே சிறப்பு வகுப்புக்கு வராததை தலைமை ஆசிரியை கண்டித்ததால், விஷ விதையை சாப்பிட்டு பிளஸ் 2 மாணவிகள் மூவர் புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றனர்.
ஜவ்வாதுமலை ஒன்றியம்,  ஜமுனாமரத்தூர் வட்டத்திலுள்ள குனிகாந்தூரில் ஜவ்வாது மலைவாழ் மக்கள் மேல்நிலைப் பள்ளி (எஸ்எப்ஆர்டீ) செயல்பட்டு வருகிறது. உண்டுஉறைவிடப் பள்ளியான இந்தப் பள்ளியில் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள 11 ஊராட்சிகளில் இருந்து முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 1,402 மலைவாழ் மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
555 மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கியும், 847 பேர் தினசரி தங்களது வீடுகளிலிருந்து வந்தும் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு காலை, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன.
இந்தப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் வெள்ளிகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திருமால் மகள் காவியா, ஏரிமாமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகள் சிந்து, ஜமுனாமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த காசி மகள் ராஜகுமாரி ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்ற சிறப்பு வகுப்புக்கு வரவில்லை எனத் தெரிகிறது. தொடர்ந்து, புதன்கிழமை காலையில் சிறப்பு வகுப்புக்கு வந்த இந்த 3 மாணவிகளையும் பள்ளித் தலைமை ஆசிரியை சில்வியா கண்டித்தாராம்.
சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டுக்குச் சென்ற மாணவிகள் மூவரும் விஷ விதையை சாப்பிட்டுவிட்டு மீண்டும் பள்ளிக்கு வந்தனராம். இந்த நிலையில், காலை 11 மணியளவில் வகுப்பறையில் 3 மாணவிகளும் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து, ஜமுனாமரத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவிகளை சிகிச்சைக்காக பள்ளி நிர்வாகத்தினர் அனுமதித்தனர். பின்னர், தீவிரச் சிகிச்சைக்காக வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு மாணவிகள் கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.