இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

திருவள்ளுவர் திருநாள் விருதுகளுக்கு தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடும் தமிழறிஞர்களுக்கு திருவள்ளுவர் தினத்தன்று தமிழக அரசு வழங்கும் விருதுகளைப் பெற செப். 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST


தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடும் தமிழறிஞர்களுக்கு திருவள்ளுவர் தினத்தன்று தமிழக அரசு வழங்கும் விருதுகளைப் பெற செப். 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடும் தமிழறிஞர்கள், தமிழுக்கு தொண்டாற்றுபவர்களைச் சிறப்பிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு விருதுகளை தோற்றுவித்துள்ளார்.
அந்த வகையில் தைத் திங்கள் திருவள்ளுவர் திருநாளில் திருவள்ளுவர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திருவிக விருது, கிஆபெ விசுவநாதம் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, பேரறிஞர் அண்ணா விருது ஆகியவை வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பவர்கள் தன் விவரக் குறிப்புகளுடன் இரண்டு புகைப்படம், எழுதிய நூல்களின் பெயர்ப் பட்டியலுடன் அந்த நூல்களில் ஒருபடி வீதம் தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை - 600008 (தொலைபேசி எண்: 044-28190412, 28190413)' என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விண்ணப்பிப்போர் tamilvalarchithurai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் விவரங்களை அனுப்பலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.