தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

புதுவையில் அனைத்துக் கோயில்களிலும் அன்னதானத் திட்டம் படிப்படியாக விரிவாக்கம்: முதல்வர் நாராயணசாமி

புதுவையில் அனைத்துக் கோயில்களிலும் படிப்படியாக அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும் என அந்த மாநில முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த புதுவை முதல்வர் வே.நாராயணசாமி.

Published On :


புதுவையில் அனைத்துக் கோயில்களிலும் படிப்படியாக அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும் என அந்த மாநில முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் முதல்வர் நாராயணசாமி வியாழக்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 
விநாயகப் பெருமானை இந்துக்கள் மட்டுமல்ல, அனைத்து மதத்தினரும் வழிபடுகின்றனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகுதான் கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு, சிறப்பாக நடைபெற்று வருகிறது. மக்களும் மனமுவந்து இந்தத் திட்டத்துக்கு நிதி வழங்கி வருகின்றனர். இந்தத் திட்டம் படிப்படியாக அனைத்து கோயில்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.
புதுவை மாநில இந்து அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி கடந்த ஜன. 16-ஆம் தேதி மணக்குள விநாயகர் கோயிலில் தொடக்கிவைத்தார். தொடர்ந்து, வேதபுரீஸ்வரர் கோயில், குரு சித்தானந்தா கோயில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில், திருநள்ளார் சனீஸ்வரன் கோயில், அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் உள்பட 10 கோயில்களில் தற்போது வெள்ளி, சனிக்கிழமைகளில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.