பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ்: மருத்துவ கல்லூரிக்கு உத்தரவு

மருத்துவப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திய மாணவருக்கு மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published On :


மருத்துவப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திய மாணவருக்கு மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கபில்தேவ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016-17-ஆம் கல்வியாண்டில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோமியோபதி மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். இதற்காக கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடையாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் செலுத்தினேன். முதலாம் ஆண்டு முடிவடைந்த நிலையில், கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாத காரணம் மற்றும் எனது உடல்நிலையின் காரணமாக மருத்துவப் படிப்பைத் தொடர முடியவில்லை. இதனால் எனது மாற்றுச் சான்றிதழை வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரினேன்.
மாற்றுச்சான்றிதழை வழங்க மறுப்புத் தெரிவித்த கல்லூரி நிர்வாகம், மருத்துவப் படிப்புக்கான முழுத் தொகையைக் கட்டினால் மட்டுமே சான்றிதழ்களை வழங்க முடியும் எனத் தெரிவித்துவிட்டது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன். அந்த மனு மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மாற்றுச் சான்றிதழை வழங்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் கல்லூரி வெளியிட்ட மாணவர் சேர்க்கைக்கான குறிப்பேட்டில், படிப்புக்காலம் முழுவதுக்குமான கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இடை நிற்றலுக்கான அபராதத் தொகையை வசூலிக்கலாம். எனவே மனுதாரரின் மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை இரண்டு வார காலத்துக்குள் கல்லூரி நிர்வாகம் வழங்க வேண்டும். மனுதாரரிடமிருந்து அபராதத் தொகையை வசூலிக்க கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம்' என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.