ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

குருபெயர்ச்சி: ஆலங்குடி கோயிலில் லட்சார்ச்சனை நாளை தொடக்கம்

வரும் அக்.4-ஆம் தேதி குருபெயர்ச்சி நடைபெறவுள்ளதையொட்டி, திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் உள்ள குரு பரிகார தலமான அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் கோயிலில் லட்சார்ச்சனை

ஆலங்குடி குரு பகவான்.

Updated On :


வரும் அக்.4-ஆம் தேதி குருபெயர்ச்சி நடைபெறவுள்ளதையொட்டி, திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் உள்ள குரு பரிகார தலமான அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் கோயிலில் லட்சார்ச்சனை விழா வியாழக்கிழமை (செப். 27) தொடங்குகிறது.
நவகிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் நாளில் குரு பெயர்ச்சி விழா வழிபாடு நடத்தப்படுகிறது. 
அதன்படி, குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு 4.10.2018 அன்று பிரவேசம் செய்வதையொட்டி, அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் கோயிலில் முதல்கட்ட லட்சார்ச்சனை விழா வியாழக்கிழமை தொடங்கி அக்.1- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை, குருபெயர்ச்சிக்கு பின்னர் அக்.8 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக, கோயில் நிர்வாகம் தெரிவித்தது:
இந்த லட்சார்ச்சனையில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் இதர ராசிக்காரர்களும் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.
லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அருள்மிகு குரு பகவான் உருவம் பொறித்த வெள்ளியினாலான 2 கிராம் டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.
தோஷ பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய முழு விவரங்களுடன் அதற்கான கட்டணம் ரூ.400-ஐ பணவிடை அல்லது வரைவோலை எடுத்து திருக்கோயில் முகவரிக்கு அனுப்பி வைத்து, பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம். 
காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. டிமாண்ட் டிராப்ட் எடுப்போர் உதவி ஆணையர், செயல் அலுவலர் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டி யூனியன் வங்கியில் (திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி கிளை) மாற்றத்தக்க வகையிலோ எடுத்து உதவி ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு ஆபத்சகாயேசுவர சுவாமி திருக்கோயில், (குரு பரிகார ஸ்தலம்) ஆலங்குடி, வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் -612801 என்ற முகவரிக்கு எடுத்து அனுப்பலாம்.
குருபெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் தக்கார் ச.கிருஷ்ணன், உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பி.தமிழ்ச்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.