மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லை: வெளியேறிய காதல் மனைவி.. கணவன் தற்கொலை 

புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லை என்பதால் காதல் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால், திருமணமான மூன்றே நாடகளில் கணவன் தற்கொலை செய்து கொண்ட  துயர சம்பவம் நிகழந்துள்ளது.  

News image
Updated On :27 செப்டம்பர் 2018, 2:25 pm

DIN

சேலம்: புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லை என்பதால் காதல் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால், திருமணமான மூன்றே நாடகளில் கணவன் தற்கொலை செய்து கொண்ட  துயர சம்பவம் நிகழந்துள்ளது.  

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் அருகே உள்ளது கோட்டக்கவுண்டன்பட்டி, இங்கு வசித்து வருபவர் செல்லத்துரை. தனியார் நிறுவன ஊழியரான அவர் தன்னுடன் வேலை செய்யும் தீபா என்பவரை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பெண்வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த மூன்று நாடகளுக்கு முன் திருமணம் நிகழ்ந்துள்ளது. 

திருமணம் முடிந்து செல்லத்துரை வீட்டிற்கு வந்த தீபாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. இதன் காரணமாக அதிருப்தியடைந்த தீபா வருத்தத்துடன் இருந்துள்ளார். செல்லத்துரையிடம் அதனை வெளிப்படுத்திய பொழுது  10 நாட்களில் அதற்கு ஏற்பாடு செய்து விடுவதாக கூறியுள்ளார். 

ஆனால் மறுநாள் வேலைக்குச் செல்வதாக கூறி விட்டுச் சென்றவர் வீட்டிற்குத் திரும்பவே இல்லை. அங்கிருந்து நேராக தனது  வீட்டிற்கு திரும்பி விட்டார். செல்லத்துரை அங்கு சென்று  தீபாவை அழைத்த பொழுது, கழிப்பறை கட்டிய பின்பு தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறி விட்டார். 

திருமணமான மூன்று நாட்களிலேயே மனைவி தன்னை விட்டுப் பிரிந்து சென்றதன் காரணமாக விரக்தியில் இருந்த செல்லத்துரை, வியாழன் காலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.    
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.