
73-ஆவது சுதந்திர தினத்தன்று ஐரோப்பிய கண்டத்தின் மிக உயரிய சிகரத்தில் தேசியக் கொடி ஏற்றி சென்னைப் பெண் சாதனைப் படைத்தார்.
சென்னையைச் சேர்ந்த மென் பொறியாளரான ஷக்தி நிவேதா, 73-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஐரோப்பிய கண்டத்திலேயே உயரமான எல்பரஸ் Mt .Elbrus சிகரத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.
இதன்மூலம் தமிழகத்திலிருந்து எல்பரஸ் சிகரம் ஏறிய முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார்.
மராட்டிய அரசு பயிற்சி பெற்ற வீராங்கனையான ஷக்தி நிவேதா, லடாக் பகுதியிலுள்ள இந்தியாவிலேயே நீளமான மலைப் பாதைக் கொண்ட ஸ்டோக் கங்கரி சிகரத்தில் ஏறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தில் 17,600 அடி வரை ஏறியுள்ளதுடன், இமயமலை தொடரில் பயிற்சிகள் மேற்கொண்டவர் என்பது போன்ற சிறப்புகளுக்கு உரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.