திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

News image
Updated On :24 ஜனவரி 2019, 1:35 am IST


கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
கஜா புயல் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல்வேறு நிவாரணப் பணிகள் செய்துதரப்பட்டன.
தமிழகம் முழுவதிலுமிருந்து மன்ற உறுப்பினர்களிடம் நிவாரணப் பொருள்களைப் பெற்று, பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கும் இவர்கள் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கஜா புயல் பாதித்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மன்றச் செயலாளர்கள், நிர்வாகிகளை நேரில் அழைத்து ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது, நிவாரண உதவிகளை சிறப்பாகச் செய்ததற்காக அவர்களுக்கு பாராட்டும், நன்றியையும் ரஜினிகாந்த் தெரிவித்ததாக மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.