மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிஎம்டிஏ அதிகாரியின் சீண்டல்கள்: வாட்ஸ்-அப் சாட்டிங் வைரலானதால் வெளிச்சத்துக்கு வந்தது

சென்னை மெட்ரோபாலிடன் டெவலப்மெண்ட் கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், தனக்குக் கீழ் பணியாற்றும் இளநிலை பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

News image
Updated On :28 ஜூன் 2019, 7:54 am

C. Shivkumar


சென்னை: சென்னை மெட்ரோபாலிடன் டெவலப்மெண்ட் கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், தனக்குக் கீழ் பணியாற்றும் இளநிலை பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மூத்த அதிகாரியின் தொந்தரவால் சிஎம்டிஏ-வில் பணியாற்றி வந்த அந்தப் பெண் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.

தற்போது, அந்த முன்னாள் பெண் ஊழியருக்கும், மூத்த அதிகாரிக்கும் நடந்த வாட்ஸ்அப் சாட் மெசேஜ்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, இது குறித்து விசாரணை நடத்த சிஎம்டிஏ உத்தரவிட்டுள்ளது.

பணி உத்திரவாதம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற வேண்டும் என்றால், தனது ஆசைக்கு இணங்கும்படி, மூத்த அதிகாரி, அப்பெண்ணுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வலியுறுத்தும் வகையில் அந்த வாட்ஸ் அப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
 

Story image

இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் சிஎம்டிஏ அதிகாரி ஒருவர், அந்த வாட்ஸ்அப் செய்தியில், SP Sir cmda என்று மட்டுமே உள்ளது. அதில் அதிகாரியின் பெயரோ செல்போன் எண்ணோ இடம்பெறவில்லை. பாதிப்புக்குள்ளான பெண் பணியை ராஜினாமா செய்துவிட்டு, செல்போன் எண்ணையும் மாற்றியுள்ளார். எனவே அப்பெண்ணின் அடையாளமும் வெளியாகாமல், குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வகையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

இது பற்றி வெளியாகும் சில தகவல்களில், அதே குறிப்பிட்ட நபரால், இதுபோன்ற வேறு சில சம்பவங்களும் நடந்திருப்பதாவும், மற்றொரு பெண் ஊழியரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

பல இடங்களில் பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் இதுவும் ஒரு வகை. வாட்ஸ்அப் மெசேஜோடு வெளியாகியிருப்பதால் நிச்சயம் குற்றவாளி அடையாளம் காணப்படலாம், தண்டிக்கப்படலாம் என்று நம்புவோம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.