திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சற்று நேரத்தில் சீன அதிபர் வருகை: சென்னையில் போக்குவரத்து நிறுத்தம்! 

சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையை அடுத்து, சென்னையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. 

News image
Updated On :11 அக்டோபர் 2019, 1:28 pm IST

சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையை அடுத்து, சென்னையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான மாமல்லபுரத்தில் இன்று மாலை சந்திக்க இருக்கின்றனர். இதற்காக  பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 12 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அதேபோன்று பிற்பகல் 2 மணியளவில் சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னைக்கு வருகை தருகிறார். 

சீன அதிபரின் வருகையையொட்டி, அவர் தங்கவிருக்கும் கிண்டி முதல் விமான நிலையம் வரை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று ராஜிவ் காந்தி சாலையில் மத்திய கைலாஷ் முதல் சோழிங்கநல்லூர் வரையுள்ள சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கிண்டி முதல் சின்னமலை வரை, சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலும் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.