வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்: 2 பேருக்கு பிடியாணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாத இருவருக்குப் பிடியாணை பிறப்பித்தும்,  வழக்கின் விசாரணையை அக்டோபர் 4 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் மாவட்ட

Updated On :31 ஜனவரி 2024, 3:35 pm IST


கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாத இருவருக்குப் பிடியாணை பிறப்பித்தும்,  வழக்கின் விசாரணையை அக்டோபர் 4 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் மாவட்ட நீதிபதி வடமலை உத்தரவிட்டார். 
கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 23 -ஆம்தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையதாக சயன்,  வாளையாறு மனோஜ், ஜிதின் ஜாய்,  ஜம்ஷேர் அலி, சதீஷன், மனோஜ் சாமி,  தீபு,  சந்தோஷ் சாமி,  பிஜின்குட்டி,  உதயகுமார் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 
இவர்களில் முதல் எதிரியாக  அறிவிக்கப்பட்டுள்ள சயன் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் 30 -ஆம் தேதி நடைபெற்றபோது 10 பேர் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட 13 பிரிவுகளில்  குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. 
அதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 13 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை மீண்டும் வந்தபோது குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் பிஜின்குட்டி, உதயகுமார் ஆகியோர் ஆஜராகவில்லை. 
எஞ்சிய 8 பேர் மட்டுமே ஆஜராகியிருந்தனர்.  அப்போது நீதிபதி வடமலையிடம், அரசியல், சமூக முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கின் விசாரணையை உடனடியாகத் தொடங்க வேண்டுமென அரசு வழக்குரைஞர் பாலநந்தகுமார் கோரிக்கை விடுத்தார். 
ஆனால்,  அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்குரைஞர் ஆனந்தன் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த ஆவணத்தின் நகலே இதுவரை  கிடைக்காத சூழலில்  மேல் முறையீடு செய்வதற்கு  அவகாசமளிக்கும் வகையில் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, மாவட்ட நீதிபதி வடமலை வெளியிட்ட உத்தரவில்,  வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 4 -ஆம் தேதிக்கு  ஒத்திவைப்பதாகவும்,  வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது நேரில் ஆஜராகாத பிஜின்குட்டி,  உதயகுமார் ஆகியோருக்குப்  பிடியாணை 
பிறப்பித்தும் உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.