தூய்மைப் பணியாளர்ளுக்கு காவல்துறை சார்பில் கௌரவிப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கரோனா பணியில் ஈடுபட்டு உள்ள தூய்மைப் பணியாளர்ளுக்கு காவல்துறை சார்பில் கௌரவிக்கப்பட்டனர்.


விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கரோனா பணியில் ஈடுபட்டு உள்ள தூய்மைப் பணியாளர்ளுக்கு காவல்துறை சார்பில் கௌரவிக்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காவல் துறையினர், மருத்துவத் துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. இந்த நிலையில் தன்னலம் கருததாது பொது நலம் கருதி பணியாற்றும் தூய்மை பணியாளர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல்துறை சார்பில் சாத்தூர் நகராட்சியில் பணிபுரியும் சுமார் 250 தூய்மைப் பணியாளர்களை கெளரவ படுத்தும் நிகழ்ச்சி சாத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை டி.ஐ.ஜி ஆணிவிஜயா மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தி மதிய உணவு விருந்து அளித்து கெளரவப் படுத்தினார்கள். மேலும் சிதம்பரம் நகரில் வறுமையில் வாடும் தீப்பெட்டி ஆலை தொழிலாளர் சுமார் 50 குடும்பத்துக்கு அரிசி மற்றும் காய்கறி கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் சாத்தூர் காவல் ஆய்வாளர் சுபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி ஆனி விஜயா காவல்துறையினர் என்பது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மட்டுமல்ல ஆபத்துக் காலங்களில் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்களை தயார் செய்து கொடுக்கிறோம். மேலும் காவல்துறையினருடன் சேர்ந்து பொதுமக்களும் இணைவது என்பது மகிழ்ச்சியான விஷயம் மக்களுக்கு தேவையான அவர்களுடைய குறைந்தபட்ச தேவைகளை பொதுமக்களுடன் சேர்ந்து பூர்த்தி செய்து வருகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...