இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

சென்னையில் 2 நாள்கள் முழு ஊரடங்கு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 14 மண்டலங்களில் ஏப்ரல் 26 மற்றும் மே 3 ஆகிய 2 நாள்களில் முழு ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 14 மண்டலங்களில் ஏப்ரல் 26 மற்றும் மே 3 ஆகிய 2 நாள்களில் முழு ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கரோனாவின் தாக்கமும், அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் தலைநகரமான சென்னைக்கு உள்பட்ட அனைத்து மண்டலங்களிலும் படிப்படியாக கரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதிலும் வா்த்தகம் மற்றும் மக்கள்தொகை அதிகமுள்ள ராயபுரம் பகுதியிலும், அரசின் முக்கிய அலுவலகங்கள் இருக்கும் தேனாம்பேட்டைப் பகுதியிலும் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.

சென்னையில் கரோனா பரவலின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தால்தான் பொது மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். அதனால், சென்னைக்கு உள்பட்ட 14 மண்டலங்களிலும் வரும் 26-ஆம் தேதி (ஞாயிறு) மற்றும் மே 3 (ஞாயிறு) ஆகிய நாள்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். இந்த நாள்களில் மருத்துவமனைகள், மருந்து கடைகள் தவிர, மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.