எலி வேட்டைக்கு சென்ற நபர் மின்வேலியில் சிக்கி பலி
மத்தூர் அருகே எலி வேட்டைக்கு சென்ற நபர் மின்வேலியில் சிக்கி பலியானார்.


மத்தூர் அருகே எலி வேட்டைக்கு சென்ற நபர் மின்வேலியில் சிக்கி பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கே. எட்டிப்பாடி கிராமத்தை சேர்ந்த சதாசிவம் (26), தனது நண்பர்கள் ஆறு பேருடன் சேர்ந்து ஒரு குழுவாக ஞாயிற்றுக்கிழமை இரவு எலி வேட்டைக்குச் சென்றனர்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (52), சபரி (27) ஆகியோரின் பாகற்காய் தோட்டத்திற்கு அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கினர். இதில் சதாசிவம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
நண்பர்கள் அன்பழகன் கோபாலகிருஷ்ணன் விக்னேஷ் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து மத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...