சிதம்பரம் அம்மா உணவகத்தில் சாப்பிட்டுப் பார்த்தார் எம்.எல்.ஏ.
சிதம்பரம் அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகத்தில் தமிழ்நாடு முதல்வர் ஆணைக்கிணங்க கடந்த 22ஆம் தேதி முதல் கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற


சிதம்பரம் அம்மா உணவகத்தில் சாப்பிட்டுப் பார்த்தார் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன்.
சிதம்பரம் அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகத்தில் தமிழ்நாடு முதல்வர் ஆணைக்கிணங்க கடந்த 22 ஆம் தேதி முதல் கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியின் சார்பில் நாள்தோறும் மூன்று வேளையும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அம்மா உணவகத்தில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு இருப்பு உள்ள மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களின் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது மதிய உணவிற்காக தயாராக இருந்த உணவினை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார். மேலும் மக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.
மக்களுக்கு தடையின்றி நாள்தோறும் உணவு வழங்கவும் நகராட்சி ஆணையரை கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, நகராட்சி பொறியாளர் மகாராஜன், முன்னாள் ஆவின் தலைவர் சுரேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...