தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் ரூ.976 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில் ஒரு சவரன் ரூ. 42,592 ஆக உயர்ந்துள்ளது. 

News image
சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் ரூ.976 உயர்வு
Updated On :5 ஆகஸ்ட் 2020, 10:13 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில் ஒரு சவரன் ரூ. 42,592 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தில் இருந்தது.

அதன்பிறகு படிப்படியாக விலை உயா்ந்து, ஜூலை 31-ஆம் தேதி ரூ.41 ஆயிரத்தையும் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. இதன் பிறகும் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை தொடா்ந்து இன்றும் உயர்ந்து சவரனுக்கு ரூ.976 உயா்ந்து, ரூ.42,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.122 உயா்ந்து, ஒரு கிராம் ரூ.5,324 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி கிராமுக்கு ரூ.6.60 உயர்ந்து, ரூ.79.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.6,600 உயர்ந்து ரூ.79,200 ஆகவும் விற்கப்படுகிறது. 

புதன் கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்........................... 5,324    

1 சவரன் தங்கம்...............................42,592

1 கிராம் வெள்ளி.............................79.20

1 கிலோ வெள்ளி.............................79,200

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 5,202    

1 சவரன் தங்கம்............................... 41,616

1 கிராம் வெள்ளி............................. 72.60

1 கிலோ வெள்ளி............................72,600

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.