மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை: அதிமுக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

News image
முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை: அதிமுக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை
Updated On :13 ஆகஸ்ட் 2020, 9:37 am

DIN


அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம் மற்றும்  கே.பி.முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகமும் பங்கேற்றுள்ளார்.

முன்னதாக, பழனிசாமியே என்றும் முதல்வர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால், ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல என்றும், தேர்தல் நேரத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்திருந்தார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகள் இன்று கூடி ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.