மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

29ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் இபாஸ் குறித்து இறுதி முடிவு எடுக்க 29ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். 

News image

முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Updated On :25 ஆகஸ்ட் 2020, 4:54 am

DIN

தமிழகத்தில் இபாஸ் குறித்து இறுதி முடிவு எடுக்க 29ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். 

கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமா் மோடி அறிவித்தாா். கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் பொதுமுடக்கத்தில் இருந்து படிப்படியாக வெளியேறும் நடவடிக்கைகள் தொடங்கின. அதற்கான தளா்வுகளை அளித்து மத்திய அரசு அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 

இதனிடையே அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு அண்மையில் கடிதம் ஒன்று எழுதியிருந்தது. அதில், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலும் பயணத்திற்கு தடை விதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும், தமிழகத்தில் மட்டும் இ-பாஸ் நடைமுறை தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த 17-ஆம் தேதி முதல் இ-பாஸ் பெறும் நடைமுறைகளில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டன. 

இந்த நிலையில் தமிழகத்தில் இ பாஸ் குறித்து இறுதி முடிவு எடுக்க 29ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையின்போது தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பு குறித்தும் முதல்வர் ஆலோசிப்பார் எனத் தெரிகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.