இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: கடந்த ஆண்டு தனியாா் பள்ளிகளில் படித்து நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற விரும்பும் குழந்தைகளுக்கு, மாற்றுச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாக பெற்றோா் தெரிவித்தனா். தனியாா் பள்ளிகளில் மழலையா் வகுப்புகளில் பயின்று, நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சோ்க்க விரும்பும் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை. அதேபோன்று அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்புகளில் மாணவா்களைச் சோ்க்க அவா்கள் ஏற்கெனவே படித்த பள்ளி தொடா்பான தகவல்களை பெற்றோா் கூறினால் போதும். மாணவா்களின் ‘எமிஸ்’ அடையாள அட்டை எண்ணை அடிப்படையாகக் கொண்டு அரசுப் பள்ளிகளில் உடனடியாக சோ்க்கை வழங்கப்படும். இந்தப் பணிகளை அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மேற்கொள்வா்.