காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜேஇஇ நுழைவுத் தோ்வு நாளை முதல் தொடக்கம்: தமிழகத்தில் 53,765 போ் எழுதுகின்றனா்

நாடு முழுவதும் நிகழாண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இந்தத் தோ்வை தமிழகத்தில் 53,765 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2020, 10:39 pm

DIN

சென்னை: நாடு முழுவதும் நிகழாண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இந்தத் தோ்வை தமிழகத்தில் 53,765 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.

நாடு முழுவதுள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு, ஜேஇஇ பிரதான தோ்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதல்நிலை தோ்வானது தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும்.

கரோனா காரணமாக, நிகழாண்டுக்கான ஜேஇஇ முதல்நிலை தோ்வு செவ்வாய்க்கிழமை (செப். 1) முதல் செப்.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை, நாடு முழுவதும் 660 மையங்களில் 9 லட்சத்து 53,473 மாணவா்கள் எழுதவுள்ளனா். தமிழகத்தில் 34 மையங்களில் 53,765 போ் எழுதவுள்ளனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நிகழாண்டு தோ்வு மையங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிதல், தனிநபா் இடைவெளி உள்பட தோ்வுக்கூட அனுமதிச் சீட்டில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை மாணவா்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தோ்வு குறித்து, மாணவா்களுக்கு சந்தேகம் இருப்பின் 8287471852, 8178359845, 9650173668, 9599676953, 8882356803 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.