இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் திருவோடு ஏந்திப் போராட்டம்

உப்பாறு அணைக்கு பிஏபி வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி அப்பகுதி விவசாயிகள் 3ஆவது நாளாக திருவோடு ஏந்தி போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

News image
உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க கோரி திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
Updated On :10 டிசம்பர் 2020, 11:25 am

DIN

உப்பாறு அணைக்கு பிஏபி வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி அப்பகுதி விவசாயிகள் 3ஆவது நாளாக திருவோடு ஏந்தி போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு பிஏபி பிரதான வாய்க்காலில் அரசூர் ஷெட்டரில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினருடன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் 5 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த திருப்பூர் மாவட்ட உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அணை முன்பாகப் பந்தலிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக உப்பாறு அணை முன்பாக வியாழக்கிழமை திருவோடு ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ரகுபதி கூறியதாவது:

பிஏபி பாசன திட்டத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து 1994 ஆம் ஆண்டு உத்தரவின்படி உப்பாறு அணைக்குத் தண்ணீர் வழங்க வேண்டும். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில் மண்டல முறை ஆயக்கட்டு பகுதியில் நீர் தேவை குறைவாக உள்ளது. ஆகவே, பிஏபி பாசனத் திட்டத்தில் வீணாகும் தண்ணீரை உப்பாறு அணைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆனால் முறைகேடாக சிலர் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பாறு அணைக்குத் தண்ணீர் வழங்கக்கோரி 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டம் நடத்தியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதலாளிகளுக்கு தண்ணீரை விற்று விடுவதால் உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறக்க மறுத்து வருகின்றனர். ஆகவே, உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறக்காவிட்டால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைத் திரட்டு உப்பாறு அணை முன்பாக கால்நடைகளுடன் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.