மத்திய அரசுதான் அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது நடைபாதை வியாபாரிகள் தரப்பில், மெரீனாவில் 1200-க்கும் மேற்பட்டோர் கடைகளை வைத்து வாழ்வாராம் ஈட்டி வந்த நிலையில் 900 பேருக்கு மட்டுமே மாநகராட்சி கடைகளை ஒதுக்கீடு செய்ய உள்ளது. எனவே மற்றவர்களையும் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், 900 கடைகளில் ஒதுக்கீடு கிடைக்காதவர்களுக்குச் சாலையோர வியாபாரிகள் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி வேறு தகுந்த இடங்களை மாநகராட்சி கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.